நடிகர் சித்தார்த் ‘பாய்ஸ்‘ படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்வும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இருவரும் ஒன்றாகப் பல இடங்களுக்கு சுற்றி வருகிறார்கள். ஆனால் தாங்கள் காதலிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. இருந்தாலும் ஊடகங்களில் அவர்களைக் காதலர்கள் என்றே சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் சித்தார்த். அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ எப்போதும் மகிழ்ச்சியாய் இரு…திரைப்படங்கள், காதல், இசை, எப்போதும் வலிமையான இதயம், மேஜிக், நிறைய சிரிப்பு, நீ நீயாக இரு, மந்திரமாய் இரு…. மகிழ்ச்சியான சித்து நாள்“, என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
