முகப்பு அண்மை செய்திகள் நடிகர் சர்வானந்த் திருமணம் கோலகலமாக நடைபெற்று முடிந்தது

நடிகர் சர்வானந்த் திருமணம் கோலகலமாக நடைபெற்று முடிந்தது

நடிகர் சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம்‘ ஆகிய படங்களில் கதையின் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர். தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சர்வானந்த்க்கும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு தெலுங்கு முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது.

திருமணத்தில் சர்வானந்த்தின் சிறு வயது நண்பரும், நடிகருமான ராம் சரண் மற்றும் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டவர்களும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். மணப்பெண் ரக்ஷிதா ரெட்டி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி என்பவரின் பேத்தி தான் ரக்ஷிதா. இவரது அப்பா மதுசூதன் ரெட்டி உயர்நீதிமன்றம் வக்கீலாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஹால்டி, சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது திருமணப் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. மேலும் ஜுன் 9-ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version