முகப்பு அண்மை செய்திகள் நகுல் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

நகுல் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

இயக்குனர் பாலாஜி ‘டி3‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதில் நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ நிற்க அதற்கு தக‘ என படக்குழு தலைப்பை வைத்துள்ளது.

மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version