இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரபு என முன்னணி நட்சத்திரங்கள் பலரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்‘. இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று (மார்ச் 20) இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது. இந்தநிலையில் தற்போது ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரின் மேக்கிங் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வந்தியதேவன் காஸ்டியூம் அணிந்து அந்த லொகேஷனில் ஒரு சீனில் நடித்து விட்டாலே நாம் அந்த கதையுடன் ஒன்றி விடுவோம் என்று கார்த்தி கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி வந்தியத்தேவன் கேரக்டருக்கான காஸ்ட்யூம் உட்பட அனைத்து ஏற்பாடுகளை செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
