நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்‘ படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்‘ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘ஜெய் பீம்‘ என்னும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க உள்ள ரஜினிகாந்த். இப்படம் போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாக உள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. இவருக்கு அதிகமான தொகையை சம்பளமாக தருவதாக கூறியும் இவர் இதில் நடிக்க சம்மதம் சொல்லவில்லை.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் குணச்சித்ரம் மட்டுமல்லாது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். விஷாலின் ‘இரும்புத்திரை‘ படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ‘ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார்.
