முகப்பு அண்மை செய்திகள் தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலில் சிறப்பு யாகம்

தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலில் சிறப்பு யாகம்

தை மாத பூச நட்சத்திர நாளை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா வரும் ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி தற்போது பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

இந்தவேளையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அப்போது, ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் நலனுக்காக (டிச.20) வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version