முகப்பு அண்மை செய்திகள் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை – நாளை முக்கிய முடிவு அறிவிப்பு

ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஆலோசனை – நாளை முக்கிய முடிவு அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதைதொடர்ந்து நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின், ஒ.பன்னீர்செல்வம் முதல்வரானார், பின்னர் அவர், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து, 5 ஆண்டு ஆட்சி நடத்தினர். பின்னர், அவர்களுக்குள் அதிமுக பொதுசெயலாளர் பதவி குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையொட்டி மீண்டும் இரு அணிகளாக பிரிந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாளர்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி, அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளார். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களை இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version