முகப்பு அண்மை செய்திகள் தெலுங்கில் அடியெடுத்து வைக்கும் ‘டாடா‘ பட நடிகை

தெலுங்கில் அடியெடுத்து வைக்கும் ‘டாடா‘ பட நடிகை

தமிழில் விஜய் நடித்த ‘பீஸ்ட்‘ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவார் நடிகை அபர்ணா தாஸ். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘டாடா‘ படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு அமோக வெற்றியையும், வரவேற்பையும் கொடுத்த நிலையில், ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது ‘சீக்ரெட் ஹோம்‘ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். வளரும் இளம் நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் 4-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்குகிறார். எஸ் நாக வம்சி மற்றும் எஸ் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் வஜ்ர காலேஸ்வரி தேவியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version