தமிழ் திரையுலகில் 20 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் பிஸியாக நடித்து வந்த காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் ’36 வயதினிலே‘ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் ‘உடன் பிறப்பே‘ என்ற தனது ஐம்பதாவது படம் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார், இரண்டு ஹிந்தி படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்திய அளவில் பல மொழிகளில் பரவலாக நடிக்க தொடங்கிவிட்ட ஜோதிகா, தனது உடலையும் கட்டுக்கோப்பாக்கும் முயற்சிகளிலும் தீவிரமடைந்து இருக்கிறார்.
அந்த வகையில் ஏற்கனவே தான் தீவிரமான ஒர்க்-அவுட் செய்த ஒரு வீடியோ வெளியிட்டிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் ஜிம்மில் பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை தான் செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
45 வயதில் இப்படி வெறித்தனமாக ஜோதிகா வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோவுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து வருவதை தொடர்ந்து நடிகர்கள் சரத்குமார், மாதவன் மற்றும் நடிகைகள் ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரும் கமெண்ட் கொடுத்துள்ளார்கள்.
