முகப்பு அண்மை செய்திகள் திரைக்கு வருமா ‘வாடிவாசல்‘?

திரைக்கு வருமா ‘வாடிவாசல்‘?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்த சூர்யா, ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் ஆகி வரும் சூரரைப்போற்று  படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த சரித்திர படம் 10 மொழிகளில் தயாராகிறது.

இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்‘ படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சூரரைப்போற்று ஹிந்தி ரிமேக்கை இயக்கி வரும் சுதா, அதை முடித்ததும் மீண்டும் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இந்த படத்தை 2023 ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும்  திட்டமிட்டுள்ளார் சூர்யா. அதன்பிறகே அவர் வாடிவாசல் படத்தில் நடிப்பர் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version