பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹுமா குரேஷி. இவர் ரஜினியின் ‘காலா‘ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஹுமா குரேஷி 36 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் திருமணம் குறித்து பேசிய நடிகை ஹுமா குரேஷி, “ஹிந்தி பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருவதால் எனக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுந்துள்ளது. நான் திருமணத்திற்காக அவசரப்படவில்லை. சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அப்படி ஒருவரை நான் சந்தித்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்துகொள்வேன்“ என கூறியுள்ளார்.
