முகப்பு அண்மை செய்திகள் திடீரென மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை

திடீரென மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை

தமிழ் திரையுலகில் எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். இவர் முதலில் திமுக-வில் உறுப்பினராக இருந்த நிலையில் தற்பேது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

மேலும் மகளிர் ஆணையத்தில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் மோசமாக விமர்சித்த திமுக பிரமுகரை கிழித்து தொங்கவிட்டார். இதனால் அந்த பிரமுகரை திமுக கட்சியை விட்டே நீக்கியது. மேலும் இவர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, இடுப்பு எலும்பு பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version