முகப்பு அண்மை செய்திகள் திடீரென ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சமந்தா

திடீரென ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சமந்தா

 

நடிகை சமந்தா சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் நடிக்க வேண்டிய சில படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் முழு ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தார், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க முடிவு செய்திருக்கிறார். அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை வைத்திருந்தார்.

நடிகை சமந்தா ஆங்கிலோ இந்திய பெண்ணான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், என்றாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களில் மட்டும் தேவாலயத்திற்கு சென்று வந்தார். தற்போது மன அமைதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் எப்போதும் பிரார்த்தனை செய்து வருகிறார். அதனால் ஜெபமாலையை எப்போதும் கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version