சின்னத்திரையில் மிமிக்ரி மற்றும் காமெடி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமான நிலையில், வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் ரோபோ சங்கர். இவர் வெள்ளித்திரையில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி பிரபலங்களோடு இணைந்து நடித்துள்ளார். அதன் பின் காமெடி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து பரிதாபமாக காணப்பட்டார். அவருக்கு மஞ்சள் காமலை நோய் ஏற்பட்டு உடல் எடை குறைந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்நிலையில் ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தெரியாத்தனமாக ஒரு கிளியை வளர்த்து விட்டேன். அது என்ன கிளி என்று தெரியாமல் பெரும்பாடுபட்டேன். அதோடு, 5 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்ததால் சாவின் விழிம்பிற்கு சென்று விட்டேன்.
அதற்கு முக்கிய காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு அடிமையாகி விட்டேன். அதனால் தான் போதை விழிப்புணர்வு பேரணி நடத்தும் உங்கள் முன்பு நான் உதாரணமாக நின்று கொண்டிருக்கிறேன்.
அதோடு பல முறை தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன். அப்போதெல்லாம் என்னை காப்பாற்றியது என் குடும்பம்தான் “ என்று மாணவர்கள் மத்தியில் தான் பட்ட கஸ்டத்தை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார் நடிகர் ரோபோ ஷங்கர்.
