தமிழ் திரையுலகில் ‘முகமூடி‘ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்‘ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவான ‘ராதே ஷியாம்‘ தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான நிலையில் தோல்வியடைந்தது. இதனைத்தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் நடித்த ‘ஆச்சார்யா‘ படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் அவரை முன்னணி கதாநாயகர்கள் ஒதுக்கி வைக்கிறார்கள் என்றும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்ற போது அவரது குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
