முகப்பு அண்மை செய்திகள் தமிழ் பட நடிகையை 4-வது திருமணம் செய்து கொண்ட 60 வயது நடிகர்

தமிழ் பட நடிகையை 4-வது திருமணம் செய்து கொண்ட 60 வயது நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ். இவர் தமிழில் ‘பணமா பாசமா‘ படத்தில் இடம்பெற்ற ‘எலந்த பழம்‘ பாடலை பாடி பிரபலமான மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் மகன் ஆவார். நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தற்போது அவருக்கு 60 வயதாகிறது. இந்நிலையில் நரேசுக்கும், பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேசுக்கும் காதல் மலர்ந்தது. பவித்ரா தமிழில் விஷாலின் ‘அயோக்யா‘, விஜய்சேதுபதியின் ‘க.பெ.ரணசிங்கம்‘, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர்.

தற்போது பவித்ராவுக்கு 44 வயதாகிறது. சமீபத்தில் நரேசும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அப்போது நரேசின் முன்னாள் மனைவி செருப்புடன் வந்து பவித்ராவை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது. இந்த நிலையில் நரேஷ்-பவித்ரா திருமணம்  பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version