முகப்பு அண்மை செய்திகள் தமிழக கோவில்களின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது – ராஜமௌலி

தமிழக கோவில்களின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது – ராஜமௌலி

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவரின் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்‘ உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

மேலும் இப்படம் பல்வேறு தேசிய விருதுகளையும் வென்றது. இவர் தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, தமிழ்நாட்டில் தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “ தமிழ்நாட்டில் சாலை பயணம் மேற்கொள்ள நீண்ட நாட்களாக விரும்பினேன். என் மகளின் விருப்பப்படி கோயில்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தோம்.

ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். எவ்வளவு நேர்த்தியான கட்டடக்கலை. பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக  சிந்தனை உண்மையிலேயே எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கும்பகோணம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது“ என பதிவிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. மேலும் சுற்றுப்பயணம் குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version