நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், பாடல் எழுதுவது, பாடுவது, படங்களை இயக்குவது, பட தயாரிப்பு என அனைத்து வித வேலைகளையும் மும்மரமாக செய்து வருகிறார். மேலும் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கில சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் மூன்று பாடல்களை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு காதல் கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தனுஷின் சகோதரியான விமலா கீதாவின் மகன் ஸ்ராவன் குமார் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை ராதிகா சமீபத்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதில் சரத்குமார் தனுஷ் படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அஜித்தின் ‘என்னை அறிந்தால், விஸ்வாசம்‘ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் காதல் கதையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
