முகப்பு அண்மை செய்திகள் தனுஷ் குரலில் ‘வா வாத்தி‘ விரைவில் வெளியீடு – ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

தனுஷ் குரலில் ‘வா வாத்தி‘ விரைவில் வெளியீடு – ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி‘. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்ற நிலையில் 50 கோடிக்கு மேல் வசூலான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழை விட தெலுங்கில் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இதில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து வெளியான ‘வா வாத்தி‘ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இப்பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில்  ‘வாத்தி‘ இசை வெளியீட்டு விழா மற்றும் பட விளம்பர நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட தனுஷ் மேடைகளில் ‘வா வாத்தி‘ பாடலை பாடி அசத்தினார். ரசிகர்களும் அவரது குரலில் இப்பாடலை வெளியிடும்படி கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தனுஷ் குரலில் ‘வா வாத்தி‘ பாடல் விரைவில் வெளியிடப்போவதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version