முகப்பு அண்மை செய்திகள் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் – அதிகாரிகள் அதிரடி

தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் – அதிகாரிகள் அதிரடி

தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஏர் ஹாரன்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். மேலும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

தற்போதுள்ள இளைஞர்கள், தங்களது பைக்குகளில், பல்வேறு சத்தங்கள் எழுப்பும் ஹாரன்களை பொருத்தி, சாலைகளில் அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துக்களும் நடக்கின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தனியார் பஸ்களில் 2 விதமான ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் செல்லும்போது, சாதாரண ஹாரனையும், புறநகர் பகுதிகளுக்கு செல்லும்போது வித்தியாசமான சத்தம் எழுப்பும் ஹாரன்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த ஹார்ன்களால் அதிர்வு ஏற்படுவதுடன் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் செல்கின்றன. அதை கட்டுப்படுத்தி, அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் ஒலி மாசு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து, மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதன்பேரில் அதிகாரிகள் குழுவினர், பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விதிகளை மீறி தனியார் பஸ்களில் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த பஸ்களை மறித்து, அதில் இருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் அபராதம் விதித்தனர். மொத்தம் 5 பஸ்களில் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு, ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version