திருப்பூர் அருகே வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சொரியாங்கிணத்துப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் அடுத்த வெள்ளகோவில் அருகே சொரியங்கிணத்து ப்பாளையம் அமைந்துள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதைதொர்ந்து இந்தாண்டு பூச்சாட்டு திருவிழா கோலாகலமாக நடந்தது.
மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 29ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி கும்பம் எடுத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 13ம் தேதி காவடி கொடுமுடி புறப்பட்டு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.
14ம் தேதி காலை, கிராம மக்கள் இணைந்து பொங்கல் வைத்து தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜையும், 15ம் காலை பூவோடு எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
