இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்‘. இதில் மாளவிகா மோகனன், பார்வதி, ஹரி, பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தங்கலான்‘ திரைப்படம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், “தங்கலான் அற்புதமாக வந்துள்ளதாக“ குறிப்பிட்டுள்ளார்.
