முகப்பு அண்மை செய்திகள் ஜெயம் ரவிக்கு இப்படியொரு வாய்ப்பா? – வாயை பிளக்கும் ரசிகர்கள்

ஜெயம் ரவிக்கு இப்படியொரு வாய்ப்பா? – வாயை பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது இவர் பிஸியாக ‘சைரன்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘ஜீனி‘ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்கவுள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை கிரித்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். மூன்றாம் நடிகைக்கான தேடல் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version