நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வரும் சூர்யாவின் இப்படம் 13 மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு அக்னீஸ்வரன் என்று டைட்டில் வைக்க சிறுத்தை சிவா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த டைட்டிலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சூர்யா 42-வது படத்தின் டைட்டில் குறித்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில், வருகிற ஏப்ரல் 16-ம் தேதி காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த டைட்டிலின் முதல் எழுத்து ‘கே‘ என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில், முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.
