முகப்பு அண்மை செய்திகள் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி

சீதையாக நடிக்கும் சாய் பல்லவி

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. பொதுவாக நடிகைகள் பலர் வளர்ச்சியடைந்தவுடன் கவர்ச்சியில் இறங்குவது வழக்கமான ஒன்று ஆனால் சாய் பல்லவி இதுவரை கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘விராட பருவம், கார்கி‘ படங்கள் கமர்ஷியலாக வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை அந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அணுகி இருப்பதாகவும் சாய்பல்லவியும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சாய் பல்லவி கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பேசுகிறார்கள். இந்த இரண்டு வருடங்களும் வேறு படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்கின்றனர்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version