இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா‘. இந்த படத்தை இவரே தயாரித்து இருந்த நிலையில், இப்படம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
இதனால் இவருக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது மும்பையில் நடந்த படவிழா நிகழ்ச்சியொன்றில் அமீர்கான் பங்கேற்று பேசும்போது, “லால் சிங் சத்தா‘ படத்துக்கு பிறகு நான் எந்த படத்தில் நடிக்க போகிறேன் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். சினிமாவில் இப்போதைக்கு நடிக்கும் என்ணம் இல்லை. கொஞ்ச காலம் சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புகிறேன். தற்போது குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன் “ என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
