முகப்பு அண்மை செய்திகள் சம்யுக்தாக்கு எதிராக நடிகை வெண்பா வெளியிட்ட பதிவு

சம்யுக்தாக்கு எதிராக நடிகை வெண்பா வெளியிட்ட பதிவு

சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சம்யுக்தாவிற்கும், ஆர்.ஜே.ரவிக்கும் இடையில் இருந்த உறவை ஆடியோ ரிலீஸ் செய்து அம்பலப்படுத்தினார் நடிகர் விஷ்ணுகாந்த்.

இதனைதொடர்ந்து ஆர்.ஜே.ரவி ஒரு அப்யூஸர் என்றும், அதனால் தான் அவரைவிட்டு பிரிந்ததாகவும் சம்யுக்தா கூறினார். இதனால் பலரும் ஆர்.ஜே.ரவியை விமர்சித்து வந்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.ரவி நீண்ட ஒரு கடிதத்தை தனது சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டிருந்தார். அதில், “நான் எதையும் விளக்கபோவதில்லை. என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் என்னுடம் நடித்த சக நடிகைகளை பாதுகாப்பாக தான் உணர செய்துள்ளேன். என் பெற்றோர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேல் நான் விளக்கம் சொல்ல வேண்டுமா?“  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை சக நடிகையான வெண்பா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ‘வீ ஸ்டேண்ட் வித் ரவி‘, ‘லெட் கர்மா ஸ்பீக்‘ என ஆர்.ஜே.ரவிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும் பலரும் ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவுக்கும் மற்றும் ஆர்.ஜே.ரவியின் இந்த பதிவுக்கும் தற்போது வரை சம்யுக்தா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

எனவே, சம்யுக்தா தான் செய்யும் தவறை மறைக்க தன்னிடம் உறவிலிருந்த ஆண்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்துகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version