இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி-2‘. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சந்திரமுகி-2‘ படத்தில் வடிவேலுவின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
