முகப்பு அண்மை செய்திகள் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கான அப்டேட் வெளியீடு

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கான அப்டேட் வெளியீடு

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடிப்பில்  கடந்த சில வருடங்களாக வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘அயோத்தி‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும் கொடுத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று(மே.25) சென்னையில் நடைபெற்றது.

இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குனர் கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

சசிகுமார் உடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் ‘பட்டாஸ்‘ படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் பல தெலுங்கு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version