முகப்பு சினிமா ‘கோல்டன் ஸ்டார்‘ பட்டத்தை பெற்ற கார்த்தி

‘கோல்டன் ஸ்டார்‘ பட்டத்தை பெற்ற கார்த்தி

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரின் நடிப்பில் இன்று ‘ஜப்பான்‘ படம் வெளியாகியுள்ளது. கார்த்தியின் 25-வது படமான இப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை இம்மானுவேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டச்சிங் டச்சிங்‘ என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். அதோடு கார்த்தி இந்த பாடலை பின்னணி பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து இந்திராவதி சவுகான் என்பவரும் பாடியுள்ளார். அதோடு இந்த பாடல் வீடியோவில் இப்பாடலை பாடியவர் உங்கள் ‘கோல்டன் ஸ்டார்‘ ஜப்பான் என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version