முகப்பு அண்மை செய்திகள் கோலகலமாக நடைபெற்ற சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீநிதி…!

கோலகலமாக நடைபெற்ற சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீநிதி…!

 

ஜீ தமிழில் ஒளிப்பரப்பான ‘யாரடி நீ மோகினி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா. அதே தொடரில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீநிதி. இவர்கள் இத்தொடரில் நடித்ததன் மூலம் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிதி நக்ஷத்திராவை பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்பினார். இதனையடுத்து மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். மற்றொருபுறம் நக்ஷத்திரா அவரது கணவர் விஸ்வாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு கர்ப்ப காலத்தில் நிகழும் வளைகாப்பு சடங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தோழியை வாழ்த்தி நலங்கு வைத்துள்ளார். மேலும், விஸ்வாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version