முகப்பு அண்மை செய்திகள் கொச்சிக்கு பயணம் சென்ற ரஜினிகாந்த்…!

கொச்சிக்கு பயணம் சென்ற ரஜினிகாந்த்…!

நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் ரஜினிகாந்தை அழைத்துச் சென்றனர். மேலும் ரஜினி ஒரு வாரம் வரை கொச்சியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version