தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்‘ படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் பொங்கலுக்கு வருமா என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இந்த நிலையில் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு பைக்கின் மீது தான் படுத்திருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு “கேப்டன் மில்லர்… டிரைலர் விரைவில். பொங்கல் ரிலீஸ்“ என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
