முகப்பு அண்மை செய்திகள் காலம் கடந்தும் பல விருதுகளை வென்று வரும் ‘கண்ணே கலைமானே‘ திரைப்படம்

காலம் கடந்தும் பல விருதுகளை வென்று வரும் ‘கண்ணே கலைமானே‘ திரைப்படம்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘கண்ணே கலைமானே‘. இதில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.

இந்த நிலையில் ‘கண்ணே கலைமானே‘ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “ நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும்.

அந்த வகையில் ‘கண்ணே கலைமானே‘ படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது “ என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version