முகப்பு அண்மை செய்திகள் காதலர் தின வாழ்த்து கூறிய நடிகர் அஜய் தேவ்கன் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

காதலர் தின வாழ்த்து கூறிய நடிகர் அஜய் தேவ்கன் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினமாக கூறப்படுகிறது. இந்நாளில் ரோஜா மலர்கள், பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லெட், கேக்குகள் என காதலர்கள் தங்களது அன்பை பரிமாறி கொள்ளும் இந்த தினத்தில் ஒருவருக்கொருவர் இந்த பொருட்களை கொடுத்து மகிழ்கின்றனர். மேலும் காதலை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. பார்த்ததும் காதல், பார்க்காமல் காதல் என தொடங்கி பல்வேறு வகையான காதலும் திரைவடிவம் பெற்று வருகின்றன. இந்த திரையுலகில் காதலர்களாக இருந்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்த பல ஜோடிகள் உள்ளன. அந்த வரிசையில் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை கஜோல் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழில் ‘மின்சார கனவு‘ படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் கஜோல். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். காதலர் தினத்தன்று நடிகர் அஜய் தேவ்கன் சமூக ஊடகத்தில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அது அவரது காதல் மனைவியான கஜோலுக்கு அல்ல. அவர் எழுதிய பதிவில், முதல் பார்வையிலேயே அது (காதல்) ஏற்பட்டதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் போக போக, மெல்ல ஆனால் உறுதியாக எனது சிந்தனையில் நிறைந்த ஒன்றாக கேமரா மாறியது. என்னை பரவசப்படுத்த ஒருபோதும் தவறாததற்காக இந்த காதலர் தின பதிவை அதற்கு அர்ப்பணிக்கிறேன். எனதுலக பார்வையை மேம்படுத்தி காட்டியதற்காக அன்பிற்குரிய கேமராவுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

மேலும் போலா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்து உள்ளார். எனினும், கஜோல் மேடத்திற்கு ஒரு  பதிவும் இல்லையே? என பல விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version