தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கவுதம் மேனன். அவர் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் கவுதம் மேனன்.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) கவுதம் மேனன் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ‘ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் இதன் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.
