முகப்பு அண்மை செய்திகள் கலையின் மீது கொண்ட காதலினால் டாட்டூ குத்திய பிக்பாஸ் பிரபலம்

கலையின் மீது கொண்ட காதலினால் டாட்டூ குத்திய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமனார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் பிக்பாஸ்க்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ‘ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்தைத் தொடர்ந்து இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் அபிராமி. இதுகுறித்த தகவலை தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்த அபிராமி வெங்கடாச்சலம், சிவராத்திரி அன்று காளகஸ்திக்கு செல்லும் போது சாலையில் அதிரடி நடனமாடிய ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாவில் நடராஜரின் உருவப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்தியிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதோடு பக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சிவனை எங்கே வைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அதிரடியான கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் ஒரு தீவிர பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version