முகப்பு அண்மை செய்திகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ‘மைக்கேல்‘ பட ஹீரோ

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ‘மைக்கேல்‘ பட ஹீரோ

சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சந்தீப் கிஷன் தான் நடித்த அதிரடி திரைப்படமான ‘மைக்கேல்‘ படத்தை மிகவும் நம்பினார். இப்படத்தை ‘புரியாத புதிர், யாருக்கும் அஞ்சேல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்‘ படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். திவ்யன்ஷா கவுசிக், தீப்ஷிகா, கவுதம் மேனன், வருன் சந்தோஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். விஜய்சேதுபதியும், வரலட்சுமியும் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 3-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தியேட்டரில் வெளியான 20 நாளில் ஓடிடி தளத்திற்கு படம் வரவுள்ளது. வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது. தாயை கொன்ற தந்தையை மகன் பழிவாங்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version