நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ‘இந்தியன் 2‘ படத்தின் அறிமுக வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இந்தியன் 2‘ படத்தின் தெலுங்கு வீடியோவை இயக்குனர் ராஜமவுலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.
