முகப்பு அண்மை செய்திகள் கணவரை கிண்டலடித்த ரசிகர்கள் – கண்கலங்கிய நடிகை நீலிமா…!

கணவரை கிண்டலடித்த ரசிகர்கள் – கண்கலங்கிய நடிகை நீலிமா…!

 

சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழித்து வருகிறார். எனவே, சமீபகாலங்களில் அதிகமாக நடிப்பதில்லை. திருமணத்திற்கு பின் தனது கணவரை எந்த அளவிற்கு நீலிமா காதலித்து வருகிறார் என அவரது சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா தனது கணவரை தாத்தா என்று சிலர் கிண்டலடிப்பதாக வருத்தப்பட்டுள்ளார். ‘ என் கணவரின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அவர் அப்பாவா? தாத்தாவா? என்று கேட்கிறார்கள்.

என் கணவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தான். மற்றவர்களுக்காக அதை மறைத்து டை அடித்துக் கொண்டு திரிய வேண்டும் என அவர் நினைப்பதில்லை. நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ, அப்படி இருக்கிறார்‘ என்று கூறி கண்கலங்கியுள்ளார்.

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version