இந்தியா முழுவதும் ‘எண்ணெயில் போட்ட கடுகு போல’ பொரிந்து கொண்டிருப்பது, நடக்க இருக்க கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலி, மூன்றாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிய பெற்று, ஹாட்ரிக் அடித்து பிரதமராக மோடி தொடர போகிறாரா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியை மண்ணைக் கவ்வ வைத்து, I.N.D.I. கூட்டணி வெற்றி பெற போகிறதா? என்கிற கேள்விகள் தான்.
‘நாங்கள் தான் வெற்றுபெறுவோம்’ என இரண்டு கூட்டணிகளுமே துண்டு போட்டு தாண்டினாலும், ஒருவர் தான் பிரதமர் நாற்காலியில் உட்கார முடியும். ஆக, வெற்றி யாருக்கு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்லக் கூடிய வகையில், தற்போதைய நிலையில் கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி, பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
அதாவது, அடுத்த ஆண்டு நடக்க இருக்க கூடிய நாடாளுமன்ற தேர்தலி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா கேரளா உள்பட 18 மாநிலங்களில் வெல்வது யார்? என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியாகி உள்ளன.
India TV-CNX சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. குறிப்பாக, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், திரிபுரா, மணிப்பூர், மேகலாயா, சிக்கிம், நாகலாந்து, மிசோராம் ஆகிய 18 மாநிலங்களை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
’இன்றைய தினம் தேர்தல் நடந்தால் உங்களின் ஆதரவு யாருக்கு?’ என்கிற அடிப்படையில், செப்டம்பர் 20-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை 54,250 பேரிடம் 18 மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இந்த 18 மாநிலங்களில் மொத்தம் 282 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்க கூடிய நிலையில், பாஜக 118 இடங்களிலும், இந்தியா கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பாஜக மட்டத்தில் மகிழ்ச்சியையும், காங்கிரஸ், திமுக மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிகபட்சமாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மத்திய பிரதேசத்தில் 25 தொகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 23 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 16 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளிலும், ஒடிசாவில் 8 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 6 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளிலும், 7 வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கம்போல், தென்னிந்தியாவில் ஜீரோ தான். அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது என கருத்து கணிப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் கர்நாடகாவில் 10, தமிழ்நாட்டில் 7 இடங்களிலும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் தலா 4 இடங்களிலும், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் தலா 2 இடங்களிலும், அசாமில் ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் I.N.D.I. கூட்டணியில் இடம்பெற்றிருக்க கூடிய திமுக தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 7 வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா கூட்ணி 3 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான BIJU ஜனதாதளம் 15 இடங்களிலும், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 15 தொகுதகிளிலும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் B.R.S கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றி விடுவோம் என்று மார்தட்டிச் சொல்லும், திமுகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட பெருத்த பின்னடைவை சந்தித்திருப்பது முதல்வர் ஸ்டாலினை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆக, மொத்தத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I. கூட்டணியை கட்டியெழுப்பி இருந்தாலும், இந்தக் கூட்டணி வலுவாக, கட்டுக்கோப்பாக சென்றாலும், இந்தக் கருத்து கணிப்பின் படி பாஜகவே முன்னிலையில் இருக்கிறது என்பதையே India TV-CNX -ன் 18 மாநில கருத்து கணிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இது ராகுல்காந்தி தலையில் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
