முகப்பு அண்மை செய்திகள் என்னை வளரவிடாமல் தடுத்தவர் நயன்தாரா – மலையாள நடிகை புலம்பல்

என்னை வளரவிடாமல் தடுத்தவர் நயன்தாரா – மலையாள நடிகை புலம்பல்

அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணையாக மாஸ்காட்டி வரும் நடிகை நயன்தாரா. இவர் எந்த படங்களில் நடித்தாலும் அது கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதால் இவருடைய சம்பளம் என்னவென்று இவர் தீர்மானித்து வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘குசேலன்‘ திரைப்படத்தில் ஒரு நடிகை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அப்போது படக்குழுவினர் அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு காட்சியில் நடிக்க இவரை அழைத்து இருக்கிறார்கள். இவரும் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஆசையாக இருந்துள்ளார். ஆனால் நயன்தாரா சம்பந்தமே இல்லாமல் இந்த கேரக்டருக்கு இவங்க தேவை இல்லை இந்த காட்சியை தவிர்த்து விடுங்கள் என்று சொல்லி நடிக்க விடாமல் செய்து விட்டாராம்.

அதனால் தான் என் கேரியர் வளராமல் போய்விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டு இருந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் தெலுங்கில் ‘அருந்ததீ‘ படத்தில் நடிக்க வாய்ப்பு இவருக்கு தான் முதலில் கிடைத்தது ஆனால் இவருக்கு ஏற்பட்ட பயத்தால் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றது. அதன்பின் அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஆனது. இப்படி கிடைத்த இரண்டு வாய்ப்புகளும் கைநழுவி போய்விட்டது என்று தற்போது சொல்லி புலம்பி வருகிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.  இவர் விஷால் நடிப்பில் வெளியான ‘சிலப்பதிகாரம்‘  மற்றும் ‘தடையறத் தாக்க‘ போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பதற்கு வருகிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version