மாடல் அழகியைக் கொலை செய்து, உடலைத் துண்டுத் துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கணவர், மாமனார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங் நாட்டின் மாடல் அழகியான எபி சாய் (Abby Choi), கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், அவரது உடல் பாகங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் பிரிட்ஜில் இருந்து எபி சாயின் துண்டிக்கப்பட்ட கால்கள் கண்டெடுக்கப்பட்டன. தலை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கொலையாளிகள் குறித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், சொத்துக்காக குடும்பத்தினருடன் சேர்ந்து கணவரே கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, ஹாங்காங் அழகியின் கணவர், கணவரின் சகோதரர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
