முகப்பு அண்மை செய்திகள் உடல் நலம் குறித்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் – சஞ்சய் தத் விளக்கம்…!

உடல் நலம் குறித்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் – சஞ்சய் தத் விளக்கம்…!

பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்து வரும் படம் ‘கேடி – தி டெவில்‘. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், அமிர் குரைஷி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் நடந்து வருகிறது. இதில் துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார். இந்த சண்டை காட்சியின் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிர்பாராதவிதமாக டம்மி குண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் சஞ்சய்தத்திற்கு காயம் ஏற்பட்டதாகவும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதை சஞ்சய் தத் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை உண்மையல்ல. கடவுள் அருளால் நான் நலமாக உள்ளேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version