முகப்பு அண்மை செய்திகள் இலங்கையில் சாகச பயணம் செய்த தமிழ் நடிகர்

இலங்கையில் சாகச பயணம் செய்த தமிழ் நடிகர்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான படம் ‘விடுதலை‘. இப்படத்தின் மூலம் நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமானார்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கொட்டுக்காளி‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்திலும் மற்றும் இன்னும் சில படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூரி, அங்குள்ள சிப் லைனில் அவர் சாகச பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை தற்போது பகிர்ந்து உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு இவற்றைப் பொறுத்து உங்கள் மகிழ்ச்சி இருக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version