முகப்பு அண்மை செய்திகள் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

மிஷ்கின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு 2‘. இதில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதும் ஏதோ காரணங்களால் தாமதமாகி வருகிறது. தற்போது விஜய்யின் ‘லியோ‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார்.

அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வெற்றிமாறனின் ‘விடுதலை‘ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்‘  படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version