முகப்பு அண்மை செய்திகள் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் வீடியோ வெளியீடு – படக்குழு அறிவிப்பு

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் வீடியோ வெளியீடு – படக்குழு அறிவிப்பு

நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா 1. இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் வரும் ஏப்ரல் 8-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்த படத்தின் சிறப்பு வீடியோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அல்லு அர்ஜூனின் பிறந்தநாளுக்கு இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version