முகப்பு அண்மை செய்திகள் 20, 21 தேதிகளில் தமிழகத்தில் கனமழை – பொதுமக்களே உஷார்

20, 21 தேதிகளில் தமிழகத்தில் கனமழை – பொதுமக்களே உஷார்

தமிழகத்தில் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல், சுமார் 80 கிமீ வேகத்தில் கரையை கடந்து சென்றது. மாலையில் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை இருந்த இந்த புயலால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். சாலையில் உள்ள மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. தரம் மற்றும் சிமெண்ட் ஷீட் பொருத்தி இருந்த வீடுகள், பறந்து சரிந்து விழுந்தன.

அதே நேரத்தில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் ஆனது. அனைத்து துறை அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு, தீவிரமாக பணியாற்றினர். இதனை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version