‘வீட்ல விசேஷம்’என்பதால், பயங்கர ஹேப்பி மூடில் இருக்கிறார் இயக்குநர் அட்லி.
தமிழில் சினிமாவில் இருக்கும் இளம் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அட்லி. முதல் படமானா ‘ராஜா ராணி’யிலேயே திரையுலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர், பிறகு ‘மெர்சல்’,‘தெறி’,‘பிகில்’என தொடர்ந்து மூன்று படங்களில் விஜய்யை இயக்கி முன்னணி வரிசைக்கு வந்தார். ‘காப்பி பேஸ்ட்’ செய்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், அதைக் கடந்து படங்களை படங்களை ஹிட் ஆக்குகிறார். இயக்குனர் அட்லீ.
இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இயக்குநர் அட்லி, கடந்த 2014 – ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.
‘வீட்ல விசேஷம்’என்பதால், பயங்கர ஹேப்பி மூடில் இருக்கும் இயக்குநர் அட்லி, மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.