முகப்பு அண்மை செய்திகள் ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன்!

ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன்!

சுமார் 10 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடந்து வருகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பொருளாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிரடி தாக்குதலால், பலர் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் நாசமாகிவிட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன், கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படை பின்வாங்கியது ,மனதஙர. இதனை, தனது நாட்டின் வெற்றி என உக்ரைன் கருதியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் உக்ரைனின் சில நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்த தாக்குதலால் மருத்துவமனை மற்றும் அங்குள்ளபிரசவ வார்டுகள் உள்ளிட்ட முக்கிய உள் கட்டமைப்புகள் மின்சாரம்இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், தெற்கு உக்ரைனின் முக்கிய நகரமான ஒடெசா மீது, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் மின்சார வினியோக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், முழுவதுமாக மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடெசா உட்பட உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version